Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

Shri Natanagopala Nayagi Swami


>>>> }}}*** வைஷ்ணவ சித்தர் *** {{{ <<<<<<<<<<









}} ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் திவ்ய சரிதம் {{


அவதாரம் : 09-01-1843 மார்கழி 22 , வியாழக்கிழமை மிருகசீரிஷ நட்சத்திரம் ஜாபாலி கோத்திரம்

இயற்பெயர் : ராமபத்திரன்
பெற்றோர் : சின்னக்கொண்டா . ஸ்ரீ ரங்காரியார் – ஸ்ரீமதி லஷ்மி அம்மையார்

பிறந்த இடம் : பால்மால் குறுக்குத்தெரு , மதுரை 625001

தவம் : தன்னுடைய 9 வது வயதிலிருந்து 12 ஆண்டு காலம் திருப்பரங்குன்றம் குகையில் தவம் இருந்தார்

மௌன விரதம் : மேலும் 11 ஆண்டுகாலம் மௌனவிரதம் அனுசரித்து திருப்பதி சென்று “ கோவிந்தா – கோவிந்தா ” என்று திருநாமத்தை கூறி மௌனவிரதத்தை முடித்துக்கொண்டார்.

குருமார்கள் : பரமக்குடி > நாகலிங்க அடிகளார் < , ஆழ்வார் திருநகரில் > வடபத்ர அரையர் ஸ்வாமிகள்

பட்டங்கள் : நாயகி ஸ்வாமிகள் அரங்கன் மீது நாயகி பாவத்தோடு பக்தி செய்வதைக்கண்ட ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகள் திருவாக்கால் “ ஸ்ரீ நடன கோபால நாயகி “ பட்டம் பெற்றார்.

வேறுபெயர்கள் : கொப்பன் சாமியார் , எட்டிக்காய் சித்தர் , சதாநந்த சித்தர் , நடன கோபாலன்

வித்தைகள் : அஷ்டமாசித்தி மற்றும் மாதவராஜ யோகம்

போதனை : குருபக்தி , ஹரிபக்தி , மொழிப்பற்று , சமூக சிந்தனை

இயற்றிய பாடல் : ஸௌராஷ்ட்ர மொழியில் 120 தமிழ் மொழியில் 27

மோட்சம் : 08-01-1914 மார்கழி 25 வியாழக்கிழமை முக்கோடி ஏகாதசி திதி – கிருத்திகை நட்சத்திரம் கூடிய நன்நாளில் ‘ ஹரி அவ்டியோ ஹரி அவ்டியோ ‘ என்று கூறியவாறு ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

ஸ்வாமிகளின் பிருந்தாவனத்திருக்கோவில் : மதுரை , அழகர்கோவில் சாலையில் உள்ள காதக்கிணறு எனும் நடனகோபாலபுரம் .









>> ஸ்ரீ நடனகோபாலநாயகி சுவாமிகள் <<<<<

நடனகோபாலநாயகி சுவாமிகள் (சனவரி 9, 1843 - சனவரி 8, 1914) ”மதுரையின் ஜோதி” என்றும் ”சௌராஷ்ட்ர ஆழ்வார்” என்றும் போற்றப்படுபவர். இவரது இயற்பெயர் ராமபத்திரன் என்பதாகும். நாகலிங்க அடிகள் எனும் குருவிடம் 'சதானந்த அடிகள்' என்ற பட்டப்பெயர் பெற்றவர். "கொப்பான் சாமியார்" என்றும் அழைக்கப்பட்டார். சுவாமிகள் தமது தாய் மொழியான சௌராஷ்ட்ரத்திலும், தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

தந்தை பெயர் அரங்கய்யர், தாயார் இலட்சுமிபாய். இளம் வயதிலேயே இவரது உள்ளம் இறைவனை பாடியது. கல்வியில் கவனம் செலுத்தாத மகனின் எதிர்கால வாழ்விற்கு தனது தந்தை செய்த முயற்சிகள் வீண் போயிற்று. இதனால் தங்கள் பரம்பரை குலத்தொழிலான நெசவுத் தொழிலில் மனம் செல்லாது, வீட்டைத் துறந்து வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறிய இராமபத்ரன், மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான் திருப்பரங்குன்றத்தின் மலை வலப்பாதையில் 12 ஆண்டுகள் கடும் தவம் செய்தார். பின்பு திருப்பரங்குன்றத்தை விட்டு பரமக்குடிக்கு சென்றார் இராமபத்ரன். அங்கு அட்டாங்க யோகியான நாகலிங்க அடிகளை அடிபணிந்து அவரது சீடரானர். அவரிடமிருந்து அட்டாங்க யோக ஸித்திகளை எளிதில் கற்று தேர்ந்தார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் பிரபலமானார்.

தமது 71வது வயதில் 1914ம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசியன்று மோக்ஷம் அடைந்தார். மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் அவரது சமாதி அமைக்கப்பட்டுள்ளது.






 

Comments

Popular posts from this blog

64 Sourashtra Gothram & Family Names

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி