Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

Jothi Lingam History

ஜோதி லிங்க வரலாறு


ஜோதிலிங்க வரலாறு



ரோஹிணிக் பக்ஷம் ரீ: பா4ர்யானுக் வஞ்செ ஹால்
த3க்ஷாகெ ஸாப3னாம் தி3ஜைஜியெ சாந்து3க்
ஸௌராஷ்ட்ர ப4வண்ணுஹால் ரக்ஷிஜுலெ லிங்கு3
ஸோமநாது ஸொன்னா ஸௌராஷ்ட்ர லிங்கு3

விளக்கம் :-

முதல் ஜோதிலிங்கமாக நமது புராதன சொந்த பூமியாகிய ஸௌராஷ்ட்ர தேசத்து சோமநாத ஜோதிலிங்கம் திகழ்கிறது.

நமது பழம்பெரும் புகழ் வரலாறு இதோ :

அஸ்வினி,பரணி,கார்த்திகை முதலிய 27 நக்ஷத்திரப் பெண்களும் தக்ஷப்ரஜாபதியின் மகள்கள். அவர்கள் அனைவரையும் “ஸோமன்” என்ற நாமம் கொண்ட சந்திரன் மணந்தான். ஆனால் கடைசி மனைவியாகிய ரோஹிணியின் மீது மட்டும் அளவற்ற காதல் கொண்டு மற்ற 26 மனைவிகளையும் திரும்பியும் பாராமல் காலங்கழித்து வந்தான்.

 அதனால் வருந்திய அந்த நக்ஷத்திரப்பெண்கள் தம் தந்தையாரிடம் கூறி முறையிட்டு அழுதனர். கோபம்கொண்ட தக்ஷனும் சந்திரனை எலும்புருக்கி நோய்கண்டு தேய்ந்து ஒளியிழந்து மறைந்து போகும்படி சாபமிட்டான். அதனால் சந்திரன் மெள்ள மெள்ளத் தேயத்தொடங்கினான் முழுவதும் தேய்வதற்குள் தனது மாமனாரிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டான்  தக்ஷனும் தம்மால் சாபத்தை திருப்பிப்பெற முடியாது என்றும் சிவபிரானைக்குறித்து வணங்கி யாகம் செய்து பிராயச்சித்தம் செய்தால் பலன் கிட்டும் என்று சொல்லியனுப்பி வைத்தார்.

பிறகு, சிவபெருமானும் ஸௌராஷ்ட்ர தேசத்திலே தனது கோவில் பூஜாரிகளாகி  உண்மை பக்தர்களாய் விளங்கும் ஸௌராஷ்ட்ரப் பிராமணர்களைக் கொண்டு யாகம் செய்கவென சந்திரனை பணித்தார். அவ்வாறே சந்திரனும் ஸௌராஷ்ட்ரத்தில் சிவன் கோவில் பட்டர்களான ஸௌராஷ்ட்ரப் பிராமணர்களைக் கொண்டு மிகப்பெரிய யாகத்தை சமுத்திரக் கரையில் செய்தான். கொஞ்சங் கொஞ்சமாக குறுகித் தேய்ந்த சந்திரன் பதினைந்து நாட்கள் முடிந்ததும் முழுவதுமாக மறைந்து போனான் கலங்கினர் ஸௌராஷ்ட்ர பட்டர்கள். சிவனை வேண்டி கோர தவத்துடன் கூடிய யாகம் செய்தனர்.

சிவபிரானும் 18ம் நாள் யாக குண்டத்தில் தோன்றி தன் தலையில் சூடிய 3ம்பிறைச் சந்திரனைக் காட்டினார். அனைவரும் ஜெகஜ்ஜோதியான பிறையணி இறைவனைக்கண்டு உளம் உருகி மேலும் மேலும் பக்திப்பெருக்கால் பொங்கி  வேத கோஷம் முழங்க யாகத்தீயை வளர்த்தனர். யாகத்தீ வளர வளர  சந்திரனும் வளர்ந்தான் பௌர்ணமி நன்னாளில் மீண்டும் முழுநிலவாகத் திகழ்ந்தான்.  சமுத்திம் பொங்கிப் பொங்கித் தனது அலைகரத்தால் ஸௌராஷ்ட்ரப் பிராமணர்களின் பாதங்களில் விழுந்து விழுந்து வணங்கியது.

அன்று முதல் சந்திரனும் 15 நாட்கள் வரை தேய்வதும் பிறகு 15 நாட்கள் வரை வளர்வதுமாகி, தேய்தல் உண்மையும், மாய்தல் உண்மையும், வளர்தல் உண்மையும் பின் நிறைதல் உண்மையும் புரியாதோரையும் புரியக்காட்டும் திங்கள் புத்தேனாகத் திகழத் தொடங்கினான். பின் அந்த திவ்ய பூமியை “ சோமநாதபுரம்” என்றும் அங்கு கோயில் கொண்டு ஸௌராஷ்ட்ர பிராமணர்களின் அன்பினைக் கொள்ளைக் கொண்ட லிங்கமூர்த்தியை “சோமநாத்” என்றும் அழைக்கத் தொடங்கினர். பாரத மக்கள்  “வாழ்க நம் ஸமூக மக்களின் பக்தித் தொண்டு” என இன்றும் நாம் பெருமைப்படக் கூடிய திவ்ய முதல் ஜோதி லிங்க வரலாறு இதுவே.


Source : 

 “sacchidaanand giitun”

Sourashtra Meera Srimathi (ThirukKondaa) 
         T.S. Sarojaasundararaajan

கோவை மாதர்குழு

Comments

Popular posts from this blog

64 Sourashtra Gothram & Family Names

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி