Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

What is Sourashtram ?

  
What is Sourashtram

ஸௌராஷ்ட்ரம் மெனத் காயொ ?

ஸௌராஷ்ட்ரம்



ஸௌராஷ்ட்ரம் என்பது ஓர் தேஸத்தையும்,மொழியையும்,இராகத்தையும் குறிக்கிறது.

ஸௌராஷ்ட்ர தேஸம் :

பம்பாய் இராஜதானியில் கத்தியவாரைச் சேர்ந்த ஜுனாகாட் ராஜ்ஜியத்தின் கடற்கரையில் அமந்திருக்கும் ஓர் திவ்யதேஸம் நமது ஸௌராஷ்ட்ர தேஸம். ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டினுள் பிரதமமான ஸோமநாதர் ஆலயம் ஸௌராஷ்ட்ர தேஸத்தில் அமந்துள்ளது.


இந்த ஸ்தலம் அசோகர் முதலிய மௌரிய மன்னர்கள் ஆட்சியிலும், விக்ரமாதித்தன் முதலிய குப்தர்கள் ஆட்சி காலத்திலும் மிகவும் சிறப்புற்றிருந்தது. அப்போது அக்கோவிலுக்கு அளவுக்கு அதிகமான செல்வங்களும்,மானியங்களும் இருந்தன. ஸோமநாத லிங்கம் மிகவும் பேருரு வாய்ந்தது.அந்தக் கோவிலின் கட்டுக்கோப்பான அரசனது சேனைகள் தங்குவதற்க்குறிய ஒரு பெரிய கோட்டையை போன்றது.


கி.பி. 1024 ம் ஆண்டில் கஜினி முகமது என்ற முகமதிய அரசன் அக் கோவிலில் ஏராளமான செல்வமிருப்பதாகக் கேள்வியுற்று அந்நகரின் மீது படையெடுத்தான். எதிர்பாராதவிதமாய் முகமதியர்கள் திடீரென ஸோமநாதர் ஆலயத்தை கைப்பற்றினர். முகமது  கஜினி ஹிந்து மதத்தில் பெரும் வெறுப்புடையவனாதலால் ஸோமநாதர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை உடைத்து செல்வமெல்லாம் கொள்ளையடித்துச் சென்றான். சிலை தகர்த்த வீரன் என்று பெயர் பூண்டான் கஜினி.
இருப்பினும் அவன் கோவிலை அழித்துச் சென்றதோடு அக்கோவில் பாழடைந்துவிடவில்லை. இன்னும் அக்கோவில் ஸௌரஷ்ட்ரத்தில் அதே இடத்தில் தன் பெருமையில் சிறிதும் குன்றாமல் சிறப்புடன் விளங்குகிறது. லட்சக்கணக்கான மக்களும் புனித யாத்திரை செய்கின்றனர்.

ஸௌராஷ்ட்ர மொழி :


ஆறுவித பிராகிருதங்களில் ஒன்றாகிய ஸௌரஸேனி (ஸூரஸேனத்துமொழி) யிலிருந்து உண்டானதோர் சிறந்த மொழி ஸௌராஷ்ட்ர மொழியாகும். (காத்யாயனர் பிராகிருத மஞ்சரி).

பிராக்ருதம் என்னும் மொழி ஸம்ஸ்க்ருத பாஷையின் முன் மொழி என்பார்கள். “ பிரா ”  “ க்ருதம் “ என்று பிரித்துப் பொருள்கொண்டால் முன்பு செய்யப் பெற்றது என ஆகும்.


“ ஸம்ஸ்க்ருதம் “ என்றால் நன்றாக செய்யப் பெற்றது.
“ ப்ராக்ருதம் “ என்றால் முன்பு  செய்யப் பெற்றது.
ஆக ஸம்ஸ்க்ருதமும் ப்ராக்ருதமும் இணை துணை மொழிகள், ஒரே வகையைச் சேர்ந்த செம்மொழிகள்.
ப்ராக்ருதம் ஐந்து மொழிகளான மக்கள் பேச்சு வழக்கில் பரவி  இருந்தது.
 “ மஹாராஷ்ட்ரீம், மகா3தீ4ம், ஸௌரஸேனீம்,கௌ3டீ3ம்,லாடீம் இத்த2மந்யா த்3ருசீம்ச “
என ஸங்கல்ப ஸூர்யோதம் கூறுகிறது.
மஹாராஷ்ட்ரீ,மகாதீ,ஸௌரஸேனீ,கௌடீ,லாடீ இந்த ஐந்து மொழிகளில் நடுநாயகமாக விளங்குவது ஸௌரஸேனீ மொழியாகும். மேற்கண்ட ஸௌரஸேனியின் மறு வடிவமே ஸௌராஷ்ட்ர மொழியாகும்.
(Vide Encyclopedia of Brittanica 11th  Edn. Vol. 12, Page 710.).

வியாசரண கர்த்தாவான “ பாணினி “  மஹரிஷி ரங்க வர்ணங்களின் உச்சரிப்பைச் சொல்லும்பொழுது ஸௌராஷ்ர ஸ்திரீயின் உச்சரிப்பைத் தமது திக்ஷையில் உதாகரித்திருக்கிறார்.(பாணினி சிக்ஷை 26 வது ஸ்லோகம்).
விக்ரமார்க்கனுடைய ஸபாபூஷண மணிகளான வரருசி தமது ஷட்பாஷா வல்லரியிலும், ஹேமசந்திராச்சார்யரின் ப்ராகிருதப்பிரகாசத்திலும்  ஸௌராஷ்ட்ர பா4ஷா இக்ஷணம் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

ஸௌராஷ்ட்ர இராகம் :


ஸௌராஷ்ட்ர ராகமானது சங்கீதத்திற்கே ஜீவகலையாயுடையது.

மூலத்திலிருந்து ஸங்கீத வித்தையை ஆதியில் உமாதேவியார்  உஷைக்குப் போதிக்க, உஷாதேவி ஸௌராஷ்ட்ர தேஸத்து ஸ்திரீகளுக்கு போதித்த நிஜ ஸங்கீதத்தையே  ஸகலரும் கற்றனர்.
இதன் விரிவு கீர்த்தனாச்சாரியர் ஸி.ஆர்.ஸ்ரீனிவாசய்யங்கார் அவர்கள் சுதேசமித்திரன் (1920) வருஷ அனுபந்தத்தில் எழுதியுள்ள “ நிஜ சங்கீதம் “ என்னும் வியாசத்தைப் பார்க்கவும்.





Comments

UPAMANYUOSS said…
maayi bhaaShaa abhimaan nhiittenu, elle siyeti, tenko maayi bhaaShaa abhimaan avnO.

Popular posts from this blog

64 Sourashtra Gothram & Family Names

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி